“எதற்கும் துணிந்தவன்” படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கப் போகும் – அடுத்தடுத்த படங்கள் என்ன தெரியுமா.? அவரே கொடுத்த அப்டேட்.

etharkum-thuninthavan
etharkum-thuninthavan

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் கடினமாக உழைத்து போராடி ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரபலமும் தற்பொழுது முன்னணி நடிகர்களாக வளர்ந்துள்ளனர் அந்த லிஸ்டில் தற்போது பார்க்கப்படுபவர் சூர்யா இவர் ஆரம்பத்தில் காதல் சென்டிமென்ட் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும்..

சமீப காலமாக ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நல்ல கருத்துகளை கொடுக்கக்கூடிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக சூரரைப்போற்று ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களில் நடித்து மிரட்டினார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் பிரஸ்மீட்டில் பல சினிமா பிரபலங்கள் நடிகர் நடிகைகள் பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். எதற்கும் துணிந்தவன் இப்படம் வருகின்ற மார்ச் 10ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து அருள்மோகன், வீனய், பிக்பாஸ் சிபி, சத்யராஜ், சூரி, ரெடிங் கிங்ஸ்லி மேலும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தியுள்ளனர். இந்த படத்தின் பிரஸ்மீட்டில் நடிகர் சூர்யா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் மேலும் படம் குறித்தும் சிலவற்றை பேசினார் அப்போது சூர்யாவிடம் அடுத்தடுத்த படங்கள் குறித்து கேட்கப்பட்டது அதற்கு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து நான் பாலாவுடன் ஒரு படம் ஆரம்பிச்சிட்டேன்.

அடுத்ததாக மக்கள் பெரிய அளவில் எதிர்பார்த்திருக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தையும் ஆரம்பித்துவிட்டோம் அதன்பிறகு மற்ற படங்களைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என கூறி உள்ளார்.இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வைரலாக சூர்யா ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.