80, 90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த் இவர் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த பொழுது கூட இவரை பலரும் தூக்கி வைத்து கொண்டாடவில்லை ஆனால் தன்னை நம்பி வருபவர்களுக்கு வாரி வாரி உதவி செய்தார். அதன் பிறகு தான் இவரை பலரும் புகழ்ந்து பேசினர்.
மேலும் கேப்டன் விஜயகாந்த் என செல்லமாக அழைத்தனர். விஜயகாந்த் இல்லாதவர்களுக்கு எப்படி உதவி செய்தாரோ அதேபோல சினிமா உலகிலும் பல பிரபலங்களுக்கு உதவிகளை செய்திருக்கிறார். அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம்.. 2005 ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாயாவி இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் ஒரு சின்ன காட்சியில் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க முதலில் சூர்யா கேட்டுக்கொண்டார் அதன் பிறகு அவரும் நிச்சயமாக நடிக்கிறேன் நாளை என்னுடைய படப்பிடிப்பு ஒன்று நடக்க இருக்கிறது அங்கே பாருங்கள் என கூறிவிட்டாராம். அடுத்த நாள் விஜயகாந்த் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது சூர்யா சென்றார்.
அங்கே விஜயகாந்த் மும்பரமாக ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த சூர்யா அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி வெகுநேரமாக காத்திருந்தாராம்.. ஷூட்டிங் முடித்த பிறகு விஜயகாந்த் வந்து தம்பி நீங்கள் வந்து வெகு நேரம் ஆகிவிட்டதா என கேட்க..
அதற்கு ஆமாம் நான் வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது என சூர்யா கூறியுள்ளார். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தால் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என சூர்யா கூறி இருக்கிறார். பிறகு கேப்டன் விஜயகாந்த் மதிய உணவு சாப்பிடாமல் சூர்யாவின் மாயாவி படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்று நடித்து கொடுத்தாராம்.