விக்ரம் படத்திற்கு முன்பே லோகேஷிடம் அறிமுகமான சூர்யா.? பழைய கதையை அப்டேட் செய்ய ரெடியான இயக்குனர்.

surya-and-karthi-

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து டாப் ஹீரோக்களை வைத்து ஆக்ஷன் திரைப்படங்கள் கொடுத்து அசத்தி வருகிறார் அந்த படங்களும் பிரம்மாண்டமான வசூலை அள்ளி குவித்து வருகின்றன அந்த வகையில் கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர் இப்பொழுது உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தையும் ஆக்சன் திரைப்படமாக கொடுத்துள்ளார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 260 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. விக்ரம் படத்தில் சூர்யா கடைசி ஐந்து நிமிடம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து பின்னி பெடல் எடுத்து விட்டு போனார் இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதோடு விக்ரம் அடுத்த பாகத்தில் சூர்யாவின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் .

சூர்யாவுக்கு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்றால் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியதன் மூலம் சூர்யாவும் லோகேஷ்க்கு அறிமுகமாகி இருப்பார் அதன் பிறகுதான் வாய்ப்பு கிடைத்ததாக பலர் கூறி வருகின்றனர் ஆனால் உண்மையில் கார்த்திக்கு முன்பே சூர்யாவிடம் அறிமுகமாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கைதி மாஸ்டர் விக்ரம் படங்களுக்கு முன்பாகவே லோகேஷ் சூர்யாவை வைத்து இரும்புக்கை, மாயாவி எனும் திரைப்படத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினார் சில காரணங்களால் அப்பொழுது அந்தப் படம் எடுக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது .

தற்போது ரசிகர்கள் அந்த படத்தை தூசி தட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க புதிய அப்டேட் உடன் இந்த படத்தை லோகேஷ் தொடங்குவார் என தெரிய படுகிறது அப்படி என்றால் மாஸ்டர் விக்ரம் படத்தை விட இரும்பு கை மாயாவி படம் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாமல் உருவாகும் என தெரியவருகிறது.