தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவர்களும் முக்கிய பிரபலங்களாக வளம் வருவது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு ஆக இவர்களுக்கு தேவ் மற்றும் தியா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.
இவர்கள் இருவரும் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களை சொந்தமாக தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுடைய 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளர்கள்.
மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள விருமன் என்ற திரைப்படத்தையும் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த விருமன் திரைப்பட போஸ்டரில் சூர்யா வழங்கும் என்ற பாணியில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளது இதில் ஜோதிகாவின் பெயர் இடம் பெறவில்லை அதேபோல சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி என்ற திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா வழங்கும் என இருவரின் பெயர்களும் இடம் பெற்று இருந்தது.
இவ்வாறு வெளிவந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு என கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கான விடை புரியாமல் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளார்கள். ஆனால் அவர்களுக்குள் பிரச்சனை நடந்ததா இல்லை இவை ஏதேனும் தெரியாமல் பதிவிட்ட போஸ்டரா என்பது புரியாமல் ரசிகர்கள் இதனை ஒரு பெரிய பிரச்சனையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.