தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த வருபவர் நடிகர் சூர்யா தேசிய விருது பெற்று புகழ்பெற்ற நடிகராகவும் தற்போது உலா வருகிறார். சூரரைப்போற்று திரைப்படத்திற்காக பல விருதுகளை வாங்கிய சூரியா அதன் பிறகு தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பாலாவுடன் நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் வணங்கான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலா உடன் சூர்யா இணைந்துள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சூர்யா அவர்கள் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி செட்டி நடித்திருக்கிறார். முதற்கட்ட படபிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து சூர்யா அவர்கள் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நேரத்தில் சிறுத்தை சிவா இயக்கம் சூர்யா 42 படத்தில் கமிட்டாகி பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் இதிலும் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்டத்திற்கு பட குழு தயாராக இருந்தது ஆனால் தற்போது சூர்யா படப்பிடிப்பிற்கு லீவு விட்டு இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு காரணம் சூர்யாவின் மனைவி ஜோதியாக தான் என்று கூறப்படுகிறது அதாவது ஜோதிகா தற்போது நடிகர் மம்முட்டியுடன் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஜோதிகா தங்களது குடும்பத்தை சரிவர பார்க்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது இதற்காக இத்தனை ஆண்டுகளாக செய்த தனது மனைவியின் தியாகத்திற்காக தன்னுடைய படத்திற்கு லீவு விட்டு தனது பிள்ளைகளை பார்த்து வருகிறாராம் சூர்யா என்று குறைபடுகிறது.