சமிபத்தில் பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் தான் ஜெய்பீம் திரைப்படம் என்ற திரைப்படம் அமேசான் பிரைம்மில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் புகழையும் ஆதரவையும் மக்களிடையே சம்பாதித்து விட்டார் நடிகர் சூர்யா.
மேலும் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது பழங்குடி மக்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் உண்மையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் இருந்ததன் காரணமாக மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை ஒரு சிலர் ரசித்து இருந்தாலும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதில் சில சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றதுதான் காரணம்.
இவ்வாறு இந்த திரைப்படம் வெளியான பிறகு உண்மையான செங்கேணி மற்றும் ராஜகண்ணு மனைவி ஆகியோரை நேரில் சந்தித்து பல மீடியாக்கள் பேட்டி எடுத்து வந்தார்கள் அந்த வகையில் இவர்களுடைய நிலைமையை அறிந்து நடிகர் லாரன்ஸ் இவர்களுக்கு சொந்த வீடு வாங்கி தருவதாக கூறி இருந்தார்.
அதேபோல நடிகர் சூர்யா பார்வதியின் வங்கிக்கணக்கில் சுமார் 10 லட்சம் டெபாசிட் செய்கிறேன் அதில் வரும் வட்டி உங்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று கூறியிருந்தார் ஆனால் சூர்யா குறித்து உண்மையான ராஜ கண்ணன் மனைவி பேசிய பேட்டி இன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் எங்கள் வாழ்க்கையை படமாக எடுத்தது பற்றி எங்கள் யாருக்கும் தெரியாது அதுமட்டுமில்லாமல் எங்களிடம் எந்த அனுமதியும் கேட்கவில்லை அதேபோல நடிகர் சூர்யாவும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது மட்டுமின்றி என்னை நேரில் கூட பார்க்கவில்லலை எனக்கு எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லையே.
அதுமட்டுமில்லாமல் எனக்கு உதவி செய்யுங்கள் என சூர்யாவிடம் நான் கேட்டேன் ஆனால் அதைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை ஆனால் என்னுடைய கதை மட்டும் இவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்க உபயோகப் படுத்திக் கொண்டார்கள். அந்த வகையில் ஏதேனும் எங்களுக்கு ஒரு வீடு அல்லது என் பேர பசங்களுக்கு ஏதேனும் வேலை வாங்கிக் கொடுங்கள் என கண்ணீர் வடிய வடிய செங்கேணி அளித்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.