நடிகர் சூர்யா சமீபகாலமாக சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை கொடுத்து நடித்து அசத்தி வருகிறார். அதன் காரணமாகவே சிகரங்களை அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். கடைசியாக கூட நடிகர் சூர்யா சூரரைப்போற்று ஜெய் பீம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா.
இப்பொழுதும் சமூக அக்கறை உள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.இந்த படம் வருகின்ற மார்ச் 11-ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
அதன் பின் நடிகர் சூர்யா தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் முதன்முறையாக கைகோர்த்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அது தாமதமாக வருவதால் உடனடியாக இயக்குனரை மாற்றியுள்ளார்.
அந்தவகையில் இயக்குனரும், தயாரிப்பாளருமான பாலாவுடன் கைகோர்த்து நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இதன் மூலம் மீண்டும் ஒருமுறை பணியாற்றியிருக்கிறார். சூர்யாவும், பாலாவும் இதுவரை இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாக மாறி உள்ளதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது அதாவது சூர்யாவும் ஜோதிகாவும் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து பாலா இயக்கும் இந்த படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.