தென்னிந்திய சினிமாவில் உச்சனச்சதிரமாக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் இந்த திரைப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 42 திரைப்படத்திற்கு முன்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வனங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார் நடிகர் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிற்கும் இயக்குனர் பாலாவிற்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நடிகர் சூர்யா அவர்கள் வணங்கான் திரைப்படத்திலிருந்து நைசாக விலகிக் கொண்டார். இது குறித்து இயக்குனர் பாலா அவர்கள் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். அதாவது தம்பி சூர்யா அவர்கள் தான் எழுதிய கதை அவருக்கு செட் ஆகாததால் இந்த படத்தில் இருந்து விலகுகிறார் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து வணங்கான் திரைப்படத்தில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் அவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் நடிகர் அருண் விஜயின் வழக்கமான பழக்கவழக்கங்கள் முழுமையாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பில் யாருடனும் சரியாக பேசுவது கூட இல்லையாம் அது மட்டுமல்லாமல் இயக்குனருடனும் நடிகர் அருண் விஜய் சரியாக பேசுவதில்லை என்று கூறபடுகிறது. பாலாவின் திரைப்படம் என்றாலே உடலை வருத்திக்கொண்டு நடித்து தான் ஆக வேண்டும் அப்படி நடித்தால் அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் அருண் விஜய் எப்பாடுப்பட்டாவது பாலாவின் திரைப்படத்தில் நடித்து முடித்து விட வேண்டும் என்று தன்னுடைய முழு வீச்சில் இறங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாலாவின் படங்கள் பல படங்கள் வெற்றி பெற்றதுண்டு இதைத் தொடர்ந்து இவருடைய படத்தில் நடித்த பல நடிகர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மார்க்கெட் சரிந்து நிற்கும் அருண் விஜய்க்கு இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வணங்கான் திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.