விஜய் தூக்கி எறிந்த கதையில் போட்டி போட்டு நடித்த சூர்யா.! கடைசியில் ஏமாந்தது தான் மிச்சம்

Vijay
Vijay

Vijay : தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான “லியோ” திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருந்தாலும் வசூல் ரீதியாக எந்த குறையும் வைக்கவில்லை.. இதுவரை மட்டுமே 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களிலும் வசூல் குறையாது என கூறப்படுகிறது. விஜய் ஆரம்ப காலகட்டத்தில் அவரது அப்பா எஸ் .ஏ சந்திரசேகர் தேர்வு செய்யும் கதைகளை நடித்து வந்தார். ஆனால் தற்பொழுது சொந்தமாக கதைகளை தேர்வு செய்வதால் கதை கேட்பதில் சற்று கோட்டை விடுகிறாரா என தெரியவில்லை.

நான் இங்க மண்டைய பிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கேன் உனக்கு ஃபர்ஸ்ட் நைட் கேக்குதா.. ஸ்ருதி மீது கோபப்பட்ட ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இவர் கடைசியாக நடித்த படங்கள் தொடர்ந்து கலவை என விமர்சனங்களை பெற்று வருகின்றன. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி அடைந்துள்ளது. இந்த நிலையில் விஜய் தவற விட்டு  கதையில் சூர்யா நடித்து குறித்து பார்ப்போம்.. இயக்குனர் விக்ரம் குமார் விஜய் -யை சந்தித்து 24 படத்தின் கதையை கூறி இருக்கிறார்.

விஜய் சரி பிறகு பார்ப்போம் என கூறிவிட்டாராம். விக்ரம் குமார் இயக்கிய தெலுங்கு படங்களை பார்த்துவிட்டு நல்ல கதையை அவரால் கொடுக்க முடியும் ஆனால் அந்த கதையை எந்த விதத்தில் கொடுக்க வேண்டுமா அந்த விதத்தில் கொடுக்க இவருக்கு தெரியவில்லை. அதனால் 24 படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

கேரளாவில் லியோ படத்திற்கு அமோக வரவேற்பு.. கூட்டத்தில் மாட்டிக் கொண்ட லோகேஷ் கனகராஜிக்கு காயம்

அதன் பிறகு அந்த கதையை சூர்யா தேர்வு செய்து நடித்தார் 24 படம் சூர்யாவுக்கு சுமாரான படமாக ஓடியது ஆனால் சூர்யாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் திறைமை, கதை போன்றவற்றை ஆராய்யும் விஜய் எப்படி லியோ போன்ற படத்தில் நடித்தார் என தளபதி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.