தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. அந்த வகையில் என் ஜி கே திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிகர் ஒருவர் சூர்யாவிடம் நீங்கள் சரியாக இந்த இத்திரைப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.அதற்கு சூர்யா இனிமேல் நன்றாக நடிக்கக் கற்றுக் கொள்கிறேன் என கூறினார்.
இந்நிலையில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா முரளி வைத்திருந்தார். சூர்யாவிற்கு இத்திரைப்படம் சில திரைப்படங்களின் தோல்விக்குப் பிறகு நல்ல வெற்றியைத் தந்தது.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்க்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் திரைப்படத்தின் இயக்குனரான வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா படித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா கத்தி மற்றும் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த போஸ்டரை பார்த்து ஏற்கனவே திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மீண்டும் இத்திரைப்படத்தின் பட்ஜெட் 90 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறி உள்ளார்கள். தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.