ஹரியை ஓரங்கட்டிவிட்டு பிரபல இயக்குனருடன் கூட்டு சேரும் சூர்யா.? இதோ பிரபல இயக்குனரே அறிவித்த சூசகமான அறிவிப்பு

suriya hari

Suriya to leave Hari and join hands with famous director : நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகியுள்ளது, இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அதுமட்டுமில்லாமல் சூர்யாவும் இந்த திரைப்படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார்.

ஏனென்றால் தொடர்ந்து சூர்யா நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தடுமாறி வருகிறார் அதனால் இந்த திரைப்படம் தடுமாற்றத்தில் இருந்து தூக்கி விடும் என நம்புகிறார். இந்த நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

இந்தநிலையில் சூர்யா அடுத்ததாக ஹரி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது, தற்போது சூர்யா ஹரி இயக்கத்தில் நடிப்பதற்கு யோசனை செய்து வருகிறார், ஏனென்றால் ஹரி சமீபகாலமாக இயக்கிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம நல்ல விமர்சனங்களை பெறவில்லை.

அதுமட்டுமில்லாமல் ஹரி சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுகிறார், ஆனால் இதற்கு முன் இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைபடத்தை இயக்கியவர் தான் இதற்கு முன் இயக்கிய கோவில் வேல் சிங்கம் ஆகிய திரைப் படங்களைப் பார்த்தாலே உங்களுக்கே தெரியும்.

இந்த நிலையில் சூர்யா தற்பொழுது கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என்ற ஹிட் திரைப்படங்களை கொடுத்த குடும்ப கதையை இயக்கும் இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, ஹரி திரைப்படத்தில் முயற்சி எடுத்து ஹிட் கொடுப்பதைவிட பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து ஹிட் கொடுத்து விடலாம், ஏனென்றால் சூரரை போற்று திரைப்படம் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த திரைப்படம் ஹிட் அடையும்.

இதனை தொடர்ந்து வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் பாண்டிராஜ் டுவிட்டரில் சூசகமாக ஒரு ட்வீட்டை தட்டியுள்ளார், அதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் தான நடிக்கப்போகிறார் என மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.