பாகுபலி பட நடிகருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சூர்யா.!

surya-
surya-

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் ரசிகர்களும் மக்களும் இவரது திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர் அதை சமீபகாலமாக சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் சூரரைப்போற்று ஆகியவை சமூக கருத்துக்களை எடுத்துரைக்கும் படமாக இருந்தது அதனை தொடர்ந்து இப்பொழுது பாண்டிராஜ் உடன் கைகோர்த்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக வருகின்ற 10ஆம் தேதி உலக அளவில் திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பாக பிரமோஷன் வேலைகளை தீவிரமாக நடைபெற்று வருகின்றனர் அதன்படி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக ராணா டகுபதியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சூர்யாவை பற்றி சில விஷயங்களையும் பகிர்ந்தார். அதில் அவர் கூறியது பத்து வருடங்களுக்கு முன் என் படத்தை சூர்யா எடிட்டிங் அறையில் பார்க்க நேர்ந்தது பின்னர் என்னை அவர் காரில் அழைத்துக்கொண்டு ஹைதராபாத் முழுவதையும் சுமார் 4 மணி நேரம் சுற்றி பார்த்தார்.

அப்போது அவர் என்னிடம் சொன்னது நீ செய்வது  நடிப்பு இல்லை பாசாங்குதான் என சொன்னார்.  அதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட பின் பாகுபலி மற்றும் நாயக் ஆகிய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாராம். அதற்கு காரணம் சூர்யா கொடுத்த அட்வைஸ் தான் காரணம் என கூறினார்.