தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா அவர்கள் தற்பொழுது கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கூட இவர் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கெத்து காட்டி உள்ளார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கமல் விஜய் சேதுபதி போன்றவர்கள் படம் முழுவதும் நடித்திருந்தாலும் சரி இவர் நடித்த ஐந்து நிமிட காட்சி தான் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது என்று சொல்லலாம் அந்த வகையில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் அளவிற்கு இந்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
மேலும் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெருமளவு பேசப்பட்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடந்து வருகிறார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் மிஞ்சும் அளவிற்கு ஒரு பிரம்மாண்ட கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம் எனவும் படம் பார்க்கும்பொழுது ரசிகர்களுக்கு என்பதற்காக இருக்க வேண்டும் எனவும் இதனை மறைமுகமாக வைத்துள்ளாராம்.
அது மட்டும் இல்லாமல் சூர்யா இந்த திரைப்படத்தில் இணைவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சங்கர் மகள் நடிக்கும் பெருமான் திரைப்படத்தை சூர்யா தான் தயாரித்து வருகிறார் அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது மட்டுமில்லாமல் தற்பொழுது ராம்சரண் நடிக்கும் திரைப்படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் அவர் கொடுத்துள்ளாராம்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சூர்யா ஒப்புக் கொண்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.