பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து பல விருதுகளை வென்று மிகவும் கௌரவமாக வெள்ளித்திரையில் வலம் வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இவரது திரைப்படங்கள் என்றால் மக்கள்கள் உடனே மிக ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இவர் தனது திரைப்படங்களை ரசிகர்களுக்கு அபூர்வமாக வெளிப்படுத்துவார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நிறைய திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை நாம் அறிவோம்.தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்தால் அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்ற அளவிற்கு போகிவிட்டது அசுரன் திரைப்படத்தில் தனுஷ் நடித்த பொழுது அசுரன் திரைப்படம் பல விருதுகளை வென்று புகழைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.சூர்யா தற்பொழுது எதற்கும் துணிந்தவன்திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய போகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தை சூர்யா முடித்தவுடன் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா தற்போது ஜல்லிக்கட்டு காளைகளுடன் பழகி வருகிறாராம். சூர்யாவை தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களில் நடிகர்கள்,நடிகைகளை நடிக்க வைப்பதற்கு வெற்றிமாறன் தேர்வு செய்து வருகிறாராம்.அதில் அமீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த கதாபாத்திரம் தற்பொழுது வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தில் இவர் நடிக்க வருகிறார் என்ற விஷயம் தெரிந்தாலே போதும் ரசிகர்கள் குஷி ஆகி விடுவார்கள். இவர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதால் ரசிகர்கள் பலரும் தற்போது குஷியாக இருக்கிறார்கள்.