சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஆசைக்கு வருகின்றனர் அதிலும் குறிப்பாக நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் விருமன் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. சூர்யா கார்த்தி மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் இணைந்து மேடையில் ஏறினார் உடனே ரோலக்ஸ் டில்லி என ரசிகர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் பணியாற்றிய முக்கிய நடிகர் மற்றும் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் சூர்யா கார்த்தி குறித்தும் படம் குறித்தும் பேசி அசத்தினர். ஆனால் எந்த ஒரு பாடல் ஆசிரியரும் மேடை ஏறி பேசவில்லை இந்த நிலையில் பிரபல பாடல் ஆசிரியர் சினேகன்.
இப்பொழுதெல்லாம் பாடல் ஆசிரியரை யாருமே கண்டு கொள்வதில்லை. மரியாதையும் குறைந்து கொண்டே வருகிறது ஏன் விருமன் இசை வெளியீட்டு விழாவில் கூட எந்த ஒரு பாடல் ஆசிரியரையும் அழைக்கவில்லை என வருத்தத்துடன் பேசினார் சினேகன் இவர் இவ்வாறு பேசிய செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.