மாதவனின் கெட்டப்பை நேரில் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியான சூர்யா – மனுஷன் என்னமா இருக்காரு.. இணையதளத்தை கலக்கும் வீடியோ.!

surya
surya

நடிகர் மாதவன் தமிழில் அலைபாயுதே திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் ஆனால் இந்த படத்திற்கு முன்பாகவே மாதவன் இந்தி கன்னடம் ஆங்கிலம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தமிழ் சினிமா தான் இவருக்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் கொடுத்து அசத்தியது இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் ஹிந்தி பக்கம் சென்றதால் தமிழ் சினிமாவில் அவரால் நடிக்க முடியாமல் போனது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இறுதிச்சுற்று.

திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்ததால் அதனை தொடர்ந்து விக்ரம் வேதா, மகளிர் மற்றும் மாறா ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இப்பொழுது ராக்கெட்ரி வளைவு என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது இந்த படம் வெகுவிரைவிலேயே திரையரங்கில் வெளியாக ரெடியாக இருக்கிறது இந்த திரைப்படம் தமிழை தாண்டி  ஆங்கிலம் இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு சின்ன பத்திரிகையாளர் வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக முதலில் மாதவனை சந்தித்துள்ளார் அப்போது மாதவனின் கெட்டப்பை பார்த்து மிரண்டு போய் அப்படியே நின்றுவிட்டார். அதன் வீடியோவை தற்போது நடிகர் மாதவன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். வீடியோவை பார்த்து ரசிகர்களே ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆகி விட்டனர் அந்த அளவிற்கு மாதவன் புதிய கெட்டப்பில் மாறி இருக்கிறார்கள். இதோ நீங்களே பாருங்கள்.