நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா உடன் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைத்து மீனவர்கள் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. அந்த படத்தின் சூட்டிங் கூட கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது சூர்யா பாலா இணைந்து பணியாற்றிய படத்தின் பெயரையும் அறிவித்தது படக்குழு.
அதாவது இந்தப் படத்திற்கு “வணங்கான்” என பெயர் வைத்தது முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் வந்தவுடன் மற்ற வேலைகள் எல்லாத்தையும் முடித்துவிட்டு வணங்கான் படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.
ஆனால் இயக்குனர் பாலாவோ இரண்டாவது கட்ட சூட்டிங் எடுப்பதற்கான கதையை இன்னுமே தயார் செய்யாமல் இருக்கிறார். இதனால் அப்செட் ஆன சூர்யா நீங்கள் கதையை பொறுமையாக உட்கார்ந்து எழுதிவிட்டு பின் வாருங்கள் நான் படத்தில் நடிக்க வருகிறேன் எனக்கூறி பாலாவை வழி அனுப்பி வைத்துவிட்டாராம். தற்பொழுது சூர்யாவுக்காக சுதா கொங்கரா, சிறுத்தை சிவா, வெற்றிமாறன் போன்ற மூன்று இயக்குனர்கள்..
வரிசை கட்டி நிற்பதால் அதில் முதலில் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து உடனே படத்தை முடித்துவிடலாம் என திட்டம் போட்டு அவருடன் தற்பொழுது சேர்ந்து உள்ளதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன. முன்னணி நடிகரின் பட வாய்ப்புகள் கிடைப்பதே பெரியது அதிலும் வந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் பாலா இவ்வாறு செய்துள்ளது தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தையே சற்று அதிர்ச்சியாக்கி உள்ளது.
சூர்யாவுக்கு நல்ல வாய்ப்புகளை பாலா வழங்கி உள்ளதால் சூர்யா பெரும் அளவு கோபப்படாமல் இயக்குனர் பாலாவை அனுப்பி மட்டும் வைத்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதே வேறு ஒருவராக இருந்திருந்தால் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா கோபப்பட்டு இருப்பார் என சொல்லப்படுகிறது.