சூர்யாவின் தலையை உருட்டும் சிவகார்த்திகேயன்..! ஆசை இருக்கலாம் அதுக்குன்னு இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..!

sivakarthikeyan-1
sivakarthikeyan-1

தமிழ் திரையுலகில் விஜய் அஜித் இவர்களை தொடர்ந்து அடுத்த இடத்தை பிடித்தவர் நடிகர் என்றால் அது சூர்யாதான் ஆரம்பத்தில் சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆனாலும் தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சறுக்கல்களை சந்தித்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தான் சுதா கொங்கரா இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி உடன் இணைந்து சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இத்திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது.

இது ஒரு பக்கமிருக்க தமிழ்சினிமாவில் விறுவிறுவென வளர்ந்து வரும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் இவர் தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர். ஆரம்பத்தில் காமெடி கலந்த திரைப்படத்தில் நடித்து வந்தாலும் தற்போது மிக சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

அந்த வகையில் தற்போது ரஜினி விஜய் அஜித் சூர்யா இவர்களை தொடர்ந்து அதிகளவு வசூல் செய்யும் ஒரு நடிகர் படம் என்றால் அது சிவகார்த்திகேயன் திரைப்படம் தான் இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளாராம்.

இவ்வாறு உருவாகும் அந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கும் முன்வந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனிடம் 25 கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளார்கள் ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது 30 கோடி வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனமும் தற்போது அவருக்கு 27 கோடி வரை சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் சிவகார்த்திகேயனும் 30 கோடி ரூபாயில் ஒரு பைசாகூட குறைக்க மாட்டேன் என பிடிவாதம் காட்டுகிறாராம். தமிழ் சினிமாவில் 30 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது சூர்யாதான் தற்போது சூர்யாவின் சம்பளத்தை சிவகார்த்திகேயன் கேட்பதால் ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.

surya-11
surya-11