தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வெற்றி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பாலாவுடன் இணைந்த நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தை சூர்யா தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தான் தயாரிக்க உள்ளாராம் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
ஆனால் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு தளத்தில் பாலா மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா பாதியிலேயே வெளியேறியது சமூக வலைதளப் பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம் பாலா சொல்வதை கேட்டு நடக்கும் பக்குவம் உள்ளவர் சூர்யா ஆனால் தற்போது அவர் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆகையால் பாலாவின் அதட்டல் எல்லாம் சூர்யாவிடம் எடுபடாது இதனால் வாக்குவாதத்தின் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
ஆனால் இதை வதந்தி என நிரூபிக்கும் வகையில் இந்த திரைப்படத்தின் படக்குழுவினர்கள் மீண்டும் ஜூன் 9 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்த உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இதற்கு பெரிய அளவில் செலவாகும் எனவும் தெரியவந்துள்ளது.
ஆனால் அந்த இடத்திலும் பால சூர்யா இடையே பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்படும் இதனால் பெருமளவு நஷ்டத்தை சந்திக்கப் போவது சூர்யா மட்டும் தான். ஆகையால் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம் என சூர்யா முடிவு செய்துள்ளாராம்.
எப்படியும் பிரச்சினை வருவது உறுதி ஆகையால் எப்படியாவது செலவை குறைத்து விடலாம் என்று கணக்குப் போட்டு உள்ளார்.