தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் தொடர்ந்து சில திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்து வந்ததால் இவரை இரண்டாம் கட்ட நடிகர்களில் லிஸ்டில் சேர்த்துள்ளார்கள். அதோடு சில திரைப் பிரபலங்கள் கூட சூர்யாவை கிண்டல் செய்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இத்திரைப்படம் தான் சூர்யாவிற்கு இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெரும் வகையில் அமைந்துள்ளது.இந்த திரைப்படத்திற்கு பிறகு தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சூர்யா 40வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள்.
சூர்யா சமீப காலங்களாக தோல்வி திரைப்படங்களை தந்து வந்தாலும் இதற்கு முன்பு உச்ச நட்சத்திரமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் வெளிவரும் புதிய படங்கள்,பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சூர்யா ஜூலை 23 ஆம் தேதி அன்று தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அந்த வகையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை இன்று வெளியிட்டார்கள். எனவே அந்த டிபி பலரால் இணையதளத்தில் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#suryaBdayCDPCarnival என்ற ஹாஸ்டாக் இந்திய அளவில் வைரலாகியுள்ளது. எனவே தற்பொழுது இவர்தான் இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார். இதனை சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.