திரையுலகில் ஒருவரின் படங்களை இன்னொருவர் கொண்டாடுவார்கள் ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல நடிகர், நடிகைகள் தயங்குவார்கள் ஆனால் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிவகார்த்திகேயன் ஒரு படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருப்பதோடு அந்த படத்தை கொண்டாடும் ரெடியாக இருக்கிறார்.
அந்த வகையில் உருவாகி வரும் திரைப்படம் தான் “உடன்பிறப்பே”. இந்த திரைப்படத்தை சூர்யாவும், அவரது மனைவியுடன் இணைந்து தயாரித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஜோதிகா பல்வேறு திரைப்படங்களை தயாரிக்கின்றனர்.
அந்த வகையில் ஜெய்பீம், ஓமை டாக், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறனர். சசிகுமார், ஜோதிகா ஆகியோர் இணைந்து “உடன்பிறப்பே” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படத்தை ரா .சரவணன் என்பவர் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதா சதீஷ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இரா சரவணன் அண்ணனின் படத்தை கொண்டாட காத்திருக்கிறேன் என கூறினார். மேலும் படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் சசிகுமார் ஜோதிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.