தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களில் ஒருவர் சூர்யா. தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகின்றார்.
இவரது மனைவி நடிகை ஜோதிகாவும் ஆரம்பத்திலிருந்தே பல திரைப்படங்களில் நடித்து என்றும் மக்களின் ஃபேவரட் நாயகியாக வலம் வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு இன்றும் ஒற்றுமையாகவும் கூட்டு குடும்பத்துடனும் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பல இளம் தம்பதியினருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். நடிகர் சூர்யா நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜெய் பீம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
நடிகர் சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படி சினிமா வாழ்க்கை குடும்ப வாழ்க்கை என இரண்டிலும் செம்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா.
தற்போது இவர்கள் ஒன்றாக ரோட்டில் ஜாகிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.