நடிகர் சூர்யா தொடர்ந்து மக்களை கவரும் படியான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் பல பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன. தற்போது இவரது கையில் வணங்கான், வாடிவாசல் போன்ற பெயர் வைக்கப்பட்ட இரு படங்கள் இருக்கின்றன.
அதனை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா, சுதா கொங்கரா போன்ற இரு இயக்குனரின் இயக்கத்திலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அண்மையில் சூர்யா நடித்து தயாரித்து வெளிவந்த சூரறை போற்று திரைப்படம் பல விருதுகள் பட்டியலில் இடம் பெற்றது. தற்போது ஹிந்தியில் சூர்யாவின் சூரறை போற்று திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி வருகிறது.
அந்தப்படத்திலும் சூரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் விக்ரம். கமல் தயாரித்த இந்த படத்தில் சூர்யா ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆம் விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து மிரட்டி இருந்தார்.
இது அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. இந்த படத்தில் நடிக்க கமலே வந்து சூர்யாவை அணுகியதால் அந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். விக்ரம் பட வெற்றிக்கு பின்பு கமல் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாக அளித்து இருந்தார். தற்போது ரோலக்ஸ் கதாபாத்திரம் போன்று சூர்யா அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும்..
புதிய படத்திலும் இணைய உள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் RC 15 திரைப்படத்தில் கேமியோ ரோலில் சூர்யா நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.