சூர்யா அடுத்த லெவெலுக்கு போகபோறார்.! இரண்டாவது முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டணி.! யார் அது தெரியுமா.?

surya
surya

சினிமா எப்படிப்பட்டது என்பதை உணர்ந்துகொண்டு சினிமாவில் பயணிப்பது தான் எப்பொழுதும் ஒருவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் அதை ஆரம்பத்திலிருந்து சிறப்பாக செய்து கொண்டு வரும் ஒருவர் தான் நடிகர் சூர்யா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் ஆக்க்ஷன் படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார்.

இருப்பினும் தொடர்ந்து ஒரே மாதிரியான ஆக்க்ஷன் படங்களில் நடித்ததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர் மேலும் அந்த திரைப்படங்களும் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய வெற்றியை ருசிக்கவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் தான் பெண் இயக்குனரான சுதா கொங்காரவை  சந்தித்து ஒரு கதையை கேட்டார் அது பிடித்துப் போக சூரரை போற்று என்ற தலைப்பில் உருவானது

இப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோடு மட்டும் அல்லாமல் சூர்யாவுக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுதந்தது. மேலும் இதில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்ததால் தற்போது வரை இவருக்கு பல்வேறு விதமான விருதுகள் குவிகின்றன. சமிபத்தில் கூட மெல்போர்ன் திரைப்பட விருது விழாவில் சூரரைப்போற்று படத்திற்கு விருது வழங்கப்பட்டு சிறப்பித்தது.

இந்த விருது மேலும் சூர்யாவின் வீடு தேடி வந்தது அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் சூர்யா சுதாகொங்காரவுடன் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அந்த எண்ணம் நிறைவேற உள்ளது.

சூர்யா தற்போது பல்வேறு முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார் அதை முடித்த பிறகு மீண்டும் சுதா கொங்காரா உடன் ஒரு புதிய படத்தில் இணைய இருவரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.