சூர்யாவின் சூரரை போற்று படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 11ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது சூரரைப்போற்று படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையிலும் நன்றாக வசூல் ஆகி வருகிறது.
இதனை அடுத்து சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்று படமும் பாண்டிராஜ் இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது மூன்றாவதாக வெப் சீரியலில் நடிக்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த வெப் சீரியசை கௌதம் மேனன் உட்பட பல இயக்குனர்கள் இதை இயக்கப்போவதாக கூறப்படுகிறது
இந்த வெப்சீரியஸ் தொடருக்கு நவரசா என பெயர் வைத்தது மட்டும்மல்லாமல் வெப் சீரியஸில் சூர்யா நடிக்க உள்ள காட்சிகளை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது இந்த வேடத்திற்காக சூர்யா தனது கெட்டப்பை மாற்றியுள்ளார் அப்படி மாற்றிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.