“வாடிவாசல்” படத்திற்காக பயங்கரமாக தயாராகும் சூர்யா..! மேடையில் ரகசியத்தை உடைத்த இயக்குனர் வெற்றிமாறன்.

surya
surya

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைத்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தின் சூட்டிங் தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து 18 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மமிதா பைஜூ மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் ஒரு படம் சூரரை போற்று படத்தை இயக்கிய சுதா கொங்காராவுடன் ஒரு படம் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படமும் பண்ண இருக்கிறார்.

அண்மையில் வாடிவாசல் படத்திலிருந்து ஒரு கிளிப்ஸ் வீடியோ வெளிவந்தது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தொடங்கப்படும் என்பது மட்டும் உறுதியாக இதுவரை தெரியவில்லை..

இப்படி இருக்கின்ற நிலையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படம் குறித்தும், சூர்யா குறித்தும் பேசி உள்ளார். வாடிவாசல் திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா ஒரு சின்ன பயிற்சி காளைகளுடன் எடுத்தோம் அதன் வீடியோ நீங்களே பார்த்து இருப்பீர்கள்.வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா அதன் பிறகு அங்கிருந்து இரண்டு மாடுகளை வாங்கி வீட்டுக்கு  வந்துள்ளார்.

அதை வளர்த்து வருகிறார். அந்த இரண்டு மாடுகளும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளன. ஒரு மாடு காங்கேயம் காளை மற்றொன்று நாட்டு மாடு என கூறியிருந்தார் வெற்றிமாறன். நிச்சயம் வாடிவாசல் திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஒரு பெஸ்ட் திரைப்படமாக இருக்கும் என இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.