தோல்வியின் விளிம்பில் கடந்த நடிகர் சூர்யா சமீபகாலமாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் சூரரைப்போற்று திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படமும் நல்லதொரு வெற்றியை ருசித்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.
அதன்பின் நடிகர் சூர்யா சிறுத்தை சிவாவுடன் புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சில இணையதள பக்கத்தில் கசிந்தது சிறுத்தை சிவாவும் பேட்டி ஒன்றில் சூர்யாவுடன் படம் பண்ண இருக்கிறார்எனக் கூறினார். அந்த படத்தில் சூர்யா கதாபாத்திரம் இரட்டை ரோல் என எல்லாம் வெளிவந்தது.
இதனால் வாடிவாசல் படத்திற்கு முன்பாகவே அந்த படத்தில் நடிப்பார் என கருதப்பட்டது ஆனால் தற்போது என்னவென்றால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க இருக்கிறோம். இடையில் என் புதுசா ஒரு இயக்குனரை உள்ளே திணிக்க வேண்டும் என்று கருதி காரணத்தினால் தற்போது சிறுத்தை சிவாவுக்கு கால்ஷீட் கொடுக்க சற்று தயங்கி வருகிறார் அதை நேரடியாக சொல்லாமல் படம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் கால்ஷீட் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும் மறைமுகமாக சொல்லி உள்ளார்.
மேலும் ஒரு வருடம் கழித்து வைத்துக் படத்தை வைத்து கொள்ளலாம் என நாசுக்காக சொல்லியிருக்கிறார் சூர்யா ஆனால் உண்மையில் அவர் சிவாவின் படத்தை தவிர்க்கவே அதிகம் நினைக்கிறார் என்று ஒரு வதந்தி ஓடிக்கொண்டிருக்கிறது.
சூர்யா எதற்கும் துணிந்தவன் வாடிவாசல் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்து வேண்டுமானால் சிறுத்தை சிவாவுடன் இணையலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய இருக்கிறார் என தெரியவந்துள்ளது.