படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாரா சூர்யா..! விளக்கம் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!

bala
bala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவர் தற்போது தன்னுடைய 41வது திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றி வருபவர் தான் இயக்குனர் பாலா. மேலும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கப்பட்டுவிட்டது.

பொதுவாக இயக்குனர் பாலா திரைப்படம் என்றாலே மிகவும் கரடு முரடாக இருப்பது மட்டுமில்லாமல் கடினமான கதாபாத்திரமாக இருப்பது வழக்கமான ஒரு செயல் தான் அந்த வகையில் எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறுவது ஒரு வழக்கம் தான்.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் கன்னியாகுமாரி கடற்கரை பகுதியில் எடுப்பதற்காக செட்டு போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். அப்பொழுது சூட்டிங் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேலையில் சூர்யா மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் தொடர் வாக்குவாதத்தில் மூலமாக நடிகர் சூர்யா கோபம் அடைந்தது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தை விட்டு மிக கோபமாக கிளம்பி சென்றதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தினை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் பாலா மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு என வெளிவந்த தகவலின்படி அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் மிக சிறப்பாக முடிவடைந்து விட்டதாகவும் அதன் பிறகு அடுத்த கட்ட திரைப்பட படப்பிடிப்பு கோவாவில் ஜூன் மாதம் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பிற்காக அங்கு மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்கள்.