20 வருடத்திற்கு பிறகு மீண்டும் கரடுமுரடான இயக்குனரின் கையை பிடித்த சூர்யா..! சேர்க்கை சரிவருமான்னு தெரியலையே..!

surya-03
surya-03

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் இவ்வாறு பிரபலமாவதற்கு  இயக்குனர் பாலா முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம் ஏனெனில் ஆரம்பத்தில் சூர்யா நடித்த திரைப்படங்கள் எதுவும் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை அதன்பிறகு பாலாவுடன் இணைந்த பிறகுதான் இவர் முழு நடிகராகவே பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் வெகு காலம் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா அவர்களே தெரிவித்துள்ளார். அந்த வகையில் சூர்யா தன்னுடைய தந்தை மற்றும் பாலா ஆகியோர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு அது மட்டும் இல்லாமல் சில பதிவுகளையும் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் என்மீது என்னைவிட அதிக நம்பிக்கை வைத்தவர் என்றால் அது பாலா தான் என்னை புதிய உலகிற்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார் மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஆர்வத்துடன் தற்போது என் அண்ணன் பாலாவுடன் பயணம் செய்ய போகிறேன்.

surya-01
surya-01

இவ்வாறு இவர் வெளியிட்ட பதிவானது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் இவர் நடிக்க போகும் இந்த திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஏற்கனவே நடிகர் சூர்யா அவர்கள் பாலாவின் இயக்கத்தில் நந்தா பிதாமகன் போன்ற திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார் இந்நிலையில் மறுபடியும் இவருடன் ஒன்று சேர்வது பார்த்தால் சூர்யாவிற்கு சினிமாவில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.

surya-02
surya-02