தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வந்து கொண்டிருக்கின்றனர் அப்படி சிறப்பாக சினிமாவுலகில் அவர்களில் ஒருவராக பயணித்துக் கொண்டு வருவதுதான் சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி காண்பதன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
இவர் ஒரு வாரிசு நடிகராக இருந்தாலும் அதனை சினிமா உலகில் பெரிதாக பயன்படுத்தாத நடிகராக இருந்து வருகிறார். இதனால் அவர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்தமான நடிகராக காணப்படுகிறார்.
இவர் சமீபகாலமாக சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தாலும் அத்தகைய திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து சொல்லும் அளவிற்கு இவருக்கு பெயரைப் பெற்றுத் தராததால் தற்பொழுது வெற்றியை நோக்கி பயணிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் பெண் இயக்குனரான சுதா கொங்கரா அவர்களுடன் இணைந்து சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமிபத்தில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வைரலானது. இத்திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகும் என செய்தி வெளியாகி வருகிறது.இதனால் இத்திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள்.
ஆனால் சூர்யா அவர்கள் இதற்கு முன்பாக மிகப்பெரிய ஒரு ஹிட் படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் இத்திரைப்படத்தை அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தவிர்த்துள்ளார் அந்த திரைப்படம் வேறு ஏதுமில்லை பாகுபலி திரைப்படம் தான் இத்திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுகியுள்ளனர். ஆனால் சூர்யாவோ கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.
அந்த படத்தில் மட்டும் அவர் நடித்து இருந்தார் அவர் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பிரபலமடைந்திருப்பார் மேலும் மிகப்பெரிய ஒரு திரைப்படத்தையும் கொடுத்திருப்பார் என அவரது ரசிகர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.