வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு தயாரிப்பதிலும் பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் சூர்யா.இவர் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பாலா இயக்கத்தில் வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விருமன் திரைப்படத்தினை தயாரித்திருந்தார் இத்திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
தயாரிப்பது மட்டுமல்லாமல் மேலும் சில துறைகளிலும் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அடிக்கடி மும்பை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் அது குறித்த தகவல் சமீபத்தில் வெளிவந்தது அதாவது சூர்யா மும்பையில் முதலீடு செய்து வருகிறாராம் இதன் காரணமாக மும்பை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் மும்பையில் மாதம் சுமார் 20 கோடி வருமானம் வருகிறதாம்.
இதனை பார்த்துவிட்டு கார்த்தியும் முதலீடு செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அதேபோல் தமிழகத்தில் உள்ள சென்னை,கோவை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் பார்க்கிங் காண்டிராக்ட்டை சூர்யாவின் நிறுவனம் தான் டெண்டர் எடுத்துள்ளதாம் அதனால் நல்ல வருமானம் சூர்யாவுக்கு கிடைத்து வருவதாக அண்மையில் வலைப்பேச்சு பத்திரிகையாளர்கள் தங்களது வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இது தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை இது குறித்து நடிகர் சூர்யாவோ இல்ல கார்த்திக்கோ விரைவில் கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.