துளி கூட மேக்கப் போடாமல் புதிய படத்தில் நடித்துள்ள சூர்யா.? எந்த திரைப்படம் தெரியுமா.? காட்டுத்தீ போல பரவும் செய்தி.

surya
surya

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரூட்டை பிடித்து போனால் மட்டுமே அந்த ஹீரோ சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் மற்றும் ரசிகர்களும்  பின்பற்றுவார்கள் அதை சரியாக புரிந்து கொண்டு சூர்யாவும் சினிமா உலகில் எப்பொழுதும் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு கெட்டப் அல்லது மாறுபட்ட கதாபாத்திரம் இதுவரை இல்லாத அளவிற்கு இருந்துவந்துள்ளது அதுபோலத்தான் சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதிலும் அவரது மாறுபட்ட கதாபாத்திரங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தை முன்னாள் பத்திரிகையாளர் ஞானவேல் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் போன்ற டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வருகிறது அதில் அவர்களுக்காக சூர்யா ஒரு வழக்கறிஞராக போராடுவது போன்று நடித்துள்ளாராம்.

இந்த படத்திற்காக அவர் சுத்தமாக மேக்கப் போடாமல் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனை சூர்யா ரசிகர்களும் தற்பொழுது வேற லெவலில் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.