இயக்குனர் பாலாவை நம்பி மோசம் போன சூர்யா..! அவசரப்பட்டு அப்டேட்டை வெளியீட்டு அப்செட்டான நிலை..!

surya-bala
surya-bala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது வெற்றிமாறன் மற்றும் சிறுத்தை சிவா போன்ற பல்வேறு இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பாலாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இவ்வாறு சூர்யா பாலாவுடன் இணைய போவதை பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது ஏனெனில் சூர்யா இதற்கு முன்பாக பாலாவின் இயக்கத்தில் நந்தா பிதாமகன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் இத்திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை கொஞ்சம் நினைத்து பார்த்தால் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கிறார் இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது இந்நிலையில் இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் படப்பிடிப்பு மீதம் உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில்

வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் வெற்றிமாறனும் தற்போது மிகவும் பிஸியாக இருப்பதன் காரணமாக வாடிவாசல் திரைப்படத்தை கிடப்பில் போட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன ஆகையால் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நடிப்பார் என பலரும் நினைத்து வந்த நிலையில் ஒரு தரப்பினர் பாலா இயக்கத்தில் நடிப்பார் என கூறி வருகிறார்கள்.

ஆனால் வழக்கம்போல் சூர்யாவுக்கு பாலா ஷாக்கொடுத்துள்ளார் ஏனெனில் ஒரு லைன் கதையை மட்டும் கூறிவிட்டு இன்னும் படத்தின் மொத்த கதையையும் எழுத வில்லை என்று கூறிவிட்டாராம் ஆகையால் இதற்கு சில மாதங்கள் ஆகும் எனக்கு நேரம் கொடுங்கள் என சூர்யாவிடம் கூறிவிட்டாராம் இதனால் சூர்யா அண்ணா உங்கள நம்பித்தான் நான் கெத்தாக இணையத்தில் பேசிவிட்டேன் நீங்கள் இப்படி செய்து விட்டீர்களே என வருத்தத்தில் உள்ளாராம்.

bala-1
bala-1

அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் ரஜினிக்கு பிடித்து போனதன் காரணமாக தன்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் சிவாவுக்கு கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன இதனால் சூர்யாவின் திரைப்படம் கிடப்பில் கிடக்கப் போகிறதோ என பலரும் வருத்தத்தில் உள்ளார்கள்.