நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் சப்ரைஸ்சாக கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக் குழு வெளியிட்டு இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் உருவாகி வரும் நிலையில் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வருகிறது.
இந்த படத்திற்காக சூர்யா ஏராளமான கெட்டப்புகள் போட்டு இருக்கும் நிலையில் வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக சிவா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படக் குழு பிலிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது அதன்படி நல்லிரவு 12 மணி வரை ரசிகர்கள் காத்து வந்தனர்.
அந்த வகையில் இந்த ஸ்கிலிம்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்ந்து போய் இருக்கும் நிலையில் இதுவரையிலும் இதுபோன்று பிறந்தநாள் சப்ரைஸ் எந்த ஒரு நடிகருக்கும் படக்குழு தரவில்லை என கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு சூர்யாவின் கதாபாத்திரத்தை உணர வைக்கும் வகையில் பாடல் வரிகள் உடன் வெளியாகி இருக்கிறது.
அதில் அவருடைய தோற்றம், பின்னணி இசை, ஒலிப்பதிவு போன்றவை ஹாலிவுட் தரத்தில் உள்ளது. இந்த வீடியோவின் இறுதியில் நலமா என்று சூர்யா கேட்கும் அந்த ஒரு வார்த்தை மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.