தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் சூர்யா நடிப்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது வாடிவாசல் திரைப்படம் மிகவும் உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது. அந்தவகையில் இத்திரைப்படம் சூர்யாவின் 40வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு, ஆதரவு,எதிர்பார்ப்பு ஆகியவை அதிகமாக இருந்து வருகிறது.
எனவே திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி சூர்யாகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சூர்யா கோரோனா பிரச்சினையில் இருந்து வெளிவந்து மார்ச் 15-ம் தேதியிலிருந்து வாடிவாசல் திரைப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. சூர்யாவின் 40வது திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கத்திவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கர்ணன் திரைப்படம் போல் இருக்குமோ என்று கூறி வந்தார்கள்.
இந்நிலையில் மதுரை சூர்யா ரசிகர்கள் வேஷ்டி சட்டையில் கையில் வாளுடன் சூர்யா நடந்து செல்லும் போஸ்டரை பெரிய பேனராகவும்,போஸ்டர் அடித்தும் ஊர் முழுவதும் வைத்துள்ளார்கள். அதில் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.