“ஜெய் பீம்” படத்தை பார்த்துவிட்டு கமல் போட்ட பதிவு – ஷாக்கான சூர்யா ரசிகர்கள்.

jai-bhim-and-kamal
jai-bhim-and-kamal

உலக நாயகன் கமலஹாசன் வெள்ளித்திரை, சின்னத்திரை, அரசியல் தற்போது வியாபாரம் என எல்லாவற்றிலும் தனது திறமையை வெளிக் காட்டி அசத்தி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் சமீப காலமாக சினிமாவில் பெரிய அளவில் நடிக்காமல் இருந்த உலகநாயகன் கமலஹாசன் திடீரென லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தற்போது விக்ரம் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது இது அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமாகும். இந்த படம் ஒரு வித்தியாசமான திரைப் படமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது அதே சமயம் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் படமாக பார்க்க படுகிறது காரணம் அந்த அளவிற்கு இந்த படத்தில் பல வில்லன்களை லோகேஷ் கனகராஜ் இறக்கி விட்டுயுள்ளார்.

கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் மற்றும் பல ஜாம்பவான்கள் நடிக்க இருக்கின்றனர் இது இப்படி இருக்க மறுபக்கம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் மீதி இருக்கின்ற நேரங்களில் எதையாவது ஒரு புதுமையான விஷயத்தை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி கண்டு வரும் திரைப்படம் ஜெய்பீம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக விட்டாலும் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்தப் படத்தை பார்த்த நடிகர் கமல் தற்போது ஒரு புதிய பதிவை போட்டுள்ளார் அவர் கூறியது. ஜெய்பீம் பார்த்தேன் கண்கள் குளமானது.

பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் டிஜே ஞானவேல். பொது சமூகத்தின் மனசாட்சி குரலற்றவர்களின் குமுறுதலை கொண்டு சேர்ந்த சூர்யா ஜோதிகா பட குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.