திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி..! சூர்யாவுக்கு விழுந்த பெரும் அடி…! ET படத்தின் நிலைமை இதுதான்.!

suriya
suriya

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த சூர்யாவை ஒரே அடியாக சறுக்கி விட்டு விட்டார் பாண்டிராஜ். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் நிலைமைதான் என்ன இங்கே காணலாம்.

பாண்டிராஜ் எழுதி இயக்கிய திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளார் கலாநிதி மாறன். மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து வீணை, பிரியங்கா அருள் மோகன், சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர்  ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

குடும்பப்பாங்கான திரைப்படத்தை தொடர்ந்து இயக்கி வருபவர் பாண்டிராஜ். அப்படி பல திரைப்படங்களில் ஹிட் கொடுத்துள்ளார் ஆனால் இந்த முறை சூர்யாவுக்கு மட்டும் செட் ஆகவில்லை என்று தான் கூற வேண்டும். டி இமான் இசையில் வெளிவந்த இந்த திரைப்படம் பெரிதாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை சொல்லப்போனால் திரையரங்கமே இந்த திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்தநிலையில் சூரியாவிடம் நஷ்ட ஈடு கேட்டு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் படை எடுத்து விட்டார்கள். சமீபத்தில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சரியான திரையரங்கு கிடைக்காமலும் வெளியான திரையரங்கில் சரியான வசூல் கிடைக்கவில்லை. அதனால் சூர்யாவுக்கு இது மரண அடியாக மாறிவிட்டது.

அதேபோல் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு முன்பதிவு ஆகவில்லை என பெரும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இரண்டாவது நாளே திரையரங்கம் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டது இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து உள்ளார்கள். அதனால் சூர்யாவை சந்தித்து நஷ்டஈடு கேட்க போவதாக திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் கிளம்பி விட்டார்கள்.

இந்த நிலையில் இதை எப்படி சூர்யா சமாளிக்கப் போகிறார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.