இன்னைக்கு சூர்யா செஞ்சது தப்பு அன்னைக்கு கமல் செய்தது நியாயமா..? வெளுக்கும் நெட்டிசன்கள்..!

kamal-jai-bheem
kamal-jai-bheem

சமீபத்தில் அமேசன் தளத்தில் வெளியாகி மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் ஜெய்பீம் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் சூர்யா.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் வண்ணிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தி காட்டியதாக ஒரு பிரச்சனை உருவாக்கியுள்ளது அந்த வகையில் இதற்கான முடிவு தான் என்ன என்பது இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது.

மேலும் இதுகுறித்து நடிகர் சூர்யாவும் எந்த ஒரு கருத்துக்களும் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார் இதனால் வன்னிய சமுதாயத்தினர் கடும் கோபத்தில் இருப்பது மட்டுமில்லாமல் சூர்யாவை தாக்கும் அளவிற்கு இறங்கிவிட்டார்கள்.

அந்த வகையில் சூர்யா தற்போது பேசியதற்கு எவ்வளவு பேர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதற்கு முன்பாகவே நடிகர் கமல் 18 வருடங்களுக்கு முன்பாக வெளிப்படையாக பேசியதை ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை என  சூர்யாவுக்கு ஆதரவாக பலர் கூறி வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகர் கமலின் வாழ்க்கையில் மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்தது தான் அன்பேசிவம் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிகர் நாசர் நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் நாசரின் பெயர் கந்தசாமி படையாட்சி என வெளிப்படையாக வைத்திருப்பார்கள்.

அந்தவகையில் இத்திரைப்படத்தில் தொழிலாளிகளை முதலாளியாக இருக்கும் நாசர் சித்திரவாதை செய்வார் அப்பொழுது இந்த திரைப்படத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையே ஆகையால் சூர்யாவுக்கு 5 கோடி கமலுக்கு 5 கோடி ஆக மொத்தம் 10 கோடி கேளுங்கள் என  சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு வெளிவந்த தகவலின்படி வன்னிய சமுதாயத்தினர் மேலும் கோபத்தில் இருப்பது மட்டுமில்லாமல் சூர்யா-ஜோதிகா உள்பட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார்.