சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது அறிவித்த போது சூர்யா என்ன செய்தார் தெரியுமா.? ஓப்பனாக பேசிய சுதா கோங்கரா.!

surarai-pottru-
surarai-pottru-

நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரறை போற்று, ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் போன்ற படங்கள் சமூகப் அக்கறை உள்ள கருத்துக்களை எடுதுறைக்கும் படங்களாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக  போய்க்கொண்டிருக்கிறது அதனை தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து வாடிவாசல், சிறுத்தை சிவா உடன் இணைந்து ஒரு புதிய படம்.

என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி ஓடுவதால் சூரியாவின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சூரியா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அதாவது 68 வது தேசிய விருது விழாவில் எந்தந்த திரைப்படம் விருது வாங்க உள்ளது என ஒரு லிஸ்ட் வெளிவந்தது.

அதில் சூர்யாவின் சூரறை போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை பெற உள்ளதாக சொல்லப்பட்டது இதனை அடுத்து சூரரைப் போற்று பட குழு செம்ம சந்தோஷத்தில் துள்ளல் ஆட்டம் போட்டது. இந்த நிலையில் சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி உள்ளார்.

தேசிய விருது சூரறை போற்றும் படத்திற்கு அறிவித்த பொழுது சூர்யா அமெரிக்காவில் இருந்தாராம் மேலும் அப்பொழுது சூர்யாவுக்கு தெரியாதாம் தூங்கிக் கொண்டிருந்தாராம் மூன்று நான்கு மணி நேரம் பிறகு தான் ஜோதிகா சொல்லி பின் இந்த செய்தியை சூர்யா கேட்டு சந்தோஷமடைந்தாராம். இதனை அந்த பேட்டியில் சொன்னார் சுதா கொங்கரா.