சினிமாவைப் பொறுத்தவரை ரீல் ஜோடிகளாக அறிமுகமான பலரும் அந்தப் படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே காதல் வயப்பட்டு ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் கோலிவுட்டில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்து வந்த நிலையில் அந்த நேரத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.
பிறகு தங்களுடைய பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சூர்யா தொடர்ந்து பல திரைப்படங்களை நடித்து வந்தாலும் கூட ஜோதிகா சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு மம்முட்டிக்கு ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் திருமணத்தின் பொழுது நடிகை ஜோதிகா ஐந்து திரைப்படங்களை கைவசம் வைத்திருந்தாராம் ஆனால் அந்த படங்கள் எல்லாம் வேண்டாம் என சூர்யா கூறிவிட்டாராம்.
அதில் ஒரு படம் தான் யாரடி நீ மோகினி இந்த படம் 2008ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் நயன்தாரா கூட்டணியில் வெளிவந்தது. இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற நிலையில் இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக முதலில் நடிகை ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம் ஆனால் சூர்யாவிற்கு இந்த படத்தில் ஜோதிகா நடிக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
ஏனென்றால் பெரும்பாலும் தனுசுடன் யார் நடித்தாலும் அந்த நடிகைகளை பற்றி சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகுவது வழக்கம் எனவே நீ நடித்தாலும் உனக்கும் இப்படிதான் நடக்கும் என சூரியா அப்பொழுது ஜோதிகாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.