விஜயுடன் மோதி மூக்கை உடைத்துக் கொண்ட சூர்யா.. பட்ட தான் தெரியுது நம்ம ரேஞ்ச் என்னன்னு.?

Vijay
Vijay

Vijay : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் நடிகர் விஜய்.  இவர் வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார் படம் அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது.

இன்று லியோ படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க ரெடியாகி உள்ளார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்ச அளவில் தயாரிக்க இருக்கிறது அதற்கான பூஜை கூட போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்த படங்களை நோக்கி விஜய் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அவர் சொன்னது என்னவென்றால்.. சில வருடங்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு விஜயின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதின..

இதில் இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பாக ஏழாம் அறிவு திரைப்படம் சற்று அதிகரித்தது.  காரணம் ஏ.ஆர். முருகதாஸ் டைரக்டர், படம் போதிதர்மரை பற்றி சொல்லக்கூடிய படம், சூர்யாவின் மாறுபட்ட கெட்டப் என ஏழாம் அறிவு படத்தை பற்றி பெரிய பேச்சு இருந்தது.

முதல் மூன்று நாட்களுக்கு ஏழாம் அறிவு படம் பெரிய அளவில் பேசப்பட்டது ஆனால் அடுத்த நாட்களில் அப்படியே உல்டாவாக மாறியது காரணம் ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர், அது இது போன்ற சீன்கள் எல்லாம் சாதாரண மக்களுக்கு புரியவில்லை இதனால் வேலாயுதம் படத்திற்கு கூட்டம் அள்ளியது.

வேலாயுதம் படம் ஒரு கம்ப்ளீட் குடும்பம் பார்க்கும் படமாக இருந்ததால் பெரியவர் முதல் இளசுகள் வரை இந்த படத்தை பார்த்து கொண்டாட்டினர் அதனால் வசூல் ரீதியாக வேலாயுதம் அப்பொழுது வெற்றி பெற்றது இதை சூர்யா உணர்ந்து கொண்டு நமக்கு அஜித், விஜய் எல்லாம் போட்டி கிடையாது நாம் ஒரு தனி டிராக்கில் போகும் என்று தீர்மானித்து விட்டதாக செய்யாறு பாலு பேசி உள்ளார்.