நடிகர் சூர்யா தற்போது தனது 42 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது ஆனால் படத்தின் தலைப்பு ரிலீஸ் தேதி போன்ற எதுவும் இன்னும் வெளியிடவில்லை.
இதைத்தொடர்ந்து அடுத்து சூர்யா வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் ஜல்லிக்கட்டை எடுத்துரைக்கும் படமாக இருக்கும். மேலும் இந்த படத்திற்காக நடிகர் சூர்யா இரு காளைகளை சொந்தமாக வாங்கி வளர்த்து பழகி வருகிறாராம். வெற்றி மாறன் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும்..
அதனால் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தை இப்போதே சூர்யா ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பெண் இயக்குனர் சுதா கொங்கரா என அடுத்தடுத்து பல இயக்குனர்களுடன் சூர்யா நடிக்க இருக்கிறார். மறுபக்கம் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.
இவர் கைவசமும் பல படங்கள் வைத்திருக்கிறார். இப்படி இருக்க சமீபத்தில் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி தனது மனைவி மற்றும் மகன், மகள் என குடும்பத்துடன் அங்கு செட்டில் ஆகிவிட்டார். இதைத்தொடர்ந்து மீண்டும் சூர்யா மும்பையில் ஒரு சொகுசு பிளாட்டை வாங்கி உள்ளாராம்.
அந்த பிளாட்டின் விலை மட்டுமே சுமார் 68 கோடி இருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன. அந்த பிளாட் மொத்தம் 9000 சதுர அடி வரை இருக்கிறதாம் மேலும் இதில் கார்டன் மற்றும் கார் பார்க்கிங் போன்ற பல வசதிகளும் இருப்பதாக கூறப்படுகின்றன. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன