நடிகர் சூர்யா எப்பொழுதுமே வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் அந்த வகையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை ருசித்து உள்ளன அதுவும் மக்களுக்கு ரொம்ப பிடித்து போனதாகவும் இருந்துள்ளது.
அந்த வகையில் சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக வெற்றிமாறனுடன் கைகொடுத்து வாடிவாசல், பாலாவுடன் இணைந்து ஒரு புதிய படமென தொடர்ந்து சிறந்த இயக்குனருடன் கைக்கோர்த்த பணியாற்றி வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது ஓ மை காட் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளது இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு விருந்தினராக சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது அவர் தனது மகன் நடிகர் சூர்யா பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது.
நடிகர் சூர்யா பள்ளிப்படிப்பில் சொதப்பினான். கல்லூரியையும் கூட சரியாக முடிக்கவில்லை ஒரு கட்டத்தில் நான் நடிகராக இருந்ததால் சூர்யாவும் நடிகராகும் எனக் கூறி எக்ஸ்போர்ட் கார்மன்ஸ் கம்பெனியில் 5 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்து வந்தான். ஆனால் அந்த வேலைக்கு செல்ல 6 ஆயிரம் ரூபாய் மாதம் செலவு செய்ய வேண்டியதாக போச்சு.
அப்படி இருக்கும் சமயத்தில் தான் இயக்குனர் வசந்த சூர்யாவை கண்டுபிடித்து நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் ஆனால் சூர்யா நடித்த மூன்று படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. அதன்பின் பாலாவின் நந்தா படம் தான் சூர்யாவுக்கு கடிவாளம் போடாத தெரிவித்தார்.