சினிமா உலகில் என்னதான் திறமையான நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் தான் அந்த நடிகரை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி அவரது முழு திறமையையும் வெளிவாங்கி அவரை வளர்த்து வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் வெற்றிக்காக ஏங்கிக்கொண்டு இருந்தவர் நடிகர் சூர்யா.
இவரை வளர்த்துவிட்டது என்னவோ இயக்குனர் பாலா தான் இயக்குனர் பாலா நந்தா திரைப்படத்தில் சூர்யாவை மிக சிறப்பாக நடிக்க வைத்து அவரை வெற்றி காண வைத்தார் இந்த படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக கிடைத்தது இருப்பினும் சூர்யா அவ்வப்போது பாலாவுடன் படத்தில் நடித்தார்.
அந்த வகையில் பிதாமகன், அவன் இவன் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் பாலாவும், சூர்யாவும் இணைந்து மீனவர்கள் சம்பந்தப்பட்டஒரு படத்தை கொடுக்க இருவரும் இணைந்தனர். பூஜைகளும் போடப்பட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் முதல்கட்ட படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது ஆனால் ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் மனக்கசப்பு இருந்து வந்துள்ளன.
இருப்பினும் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இருந்தாலும் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படகாரணம் பாலா எடுத்த ஷார்ட்டையை மாறி மாறி எடுத்து வருகிறார் என்ற தகவல் வெளியானது ஆனால் ஒரு சிலர் அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை அதனால் தான் மீண்டும் மீண்டும் எடுத்தார் என சொல்லிக் கொண்டனர்.
ஆனாலும் முதல் நாள் அடுத்த ஷார்ட்டை மறுநாளும் முதலிலிருந்து எடுக்க சொல்கிறாராம் இதனால் கடுப்பாகிப் போன படக்குழு முதலில் ஸ்கிரிப்டில் உள்ளதை கதைக்கு ஏற்றவாறு செதுக்கிய பிறகு படத்தை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என கூறி ரத்து செய்துள்ளோம்.