காசு வாங்காமல் நடித்துக் கொடுத்த சூர்யா, விஜய் சேதுபதி – அசந்து போன பிரபல இயக்குனர்.! அந்த சம்பள காசை என்ன பண்ணினார் தெரியுமா.? சுவாரசியமான தகவல் இதோ.

surya and vijay sethupathy
surya and vijay sethupathy

90 கால கட்டங்களில் இருந்துவிட்டு தற்போது வரையிலும் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தான் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை மக்களுக்கு அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் மணிரத்தினம்.

இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் கூட நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார்.

முதல் பாகத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக எடுத்து வருகிறார் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படி ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இடையில் மணிரத்தினம் அந்தலாஜி என்ற ஒரு புதிய சீரியஸை எடுத்தனர். இதில் ஒன்பது இயக்குனர்களில் இணைந்து ஒன்பது பாகங்களை எடுத்தனர். அதில் ஒரு பாகத்தை மணிரத்தினம் எடுத்து இருந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா போன்றோர் நடித்திருந்தனர் அவர்கள் இருவரும் துளிகூட காசு வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார் என சமீபத்தில் கூறினார்.

அப்படி நடித்த கலைஞர்கள் பலரும் காசு வாங்காமல் இந்த படத்தில் நடித்துக் கொடுத்தால் அந்த அந்த பணத்தை வேலை இல்லாமல் கஷ்டப்படும் 12,000 சினிமா தொழிலாளர் குடும்பத்திற்கு உதவ முடிவு எடுத்துள்ளதாக மணிரத்தினம் தெரிவித்துள்ளார். நான் இவ்வாறு செய்ய காரணம் அவர்கள்தான் என வெளிப்படையாக பேட்டியில் கூறி அசத்தினார்.