அண்ணன் தம்பி என பாகுபாடுயில்லாமல் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் வளம் வருபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் இவர்கள் இருவரும் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்திற்காக இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது பலருக்கும் தெரியும் அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் கைதி இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகி சாதனை படைத்தது.
மேலும் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று என்ற திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் சுல்தான் இந்த திரைப்படம் ரிலீசுக்கு ரெடி ஆகி இருக்கிறது என்றே கூறலாம் மேலும் நடிகர் சூர்யா தற்போது நவரசா என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவும் கார்த்திக்கும் சிறுவயதில் கிருஷ்ணன் வேடம் அணிந்து இருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.