தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் மற்றும் பல நடிகைகள் காதலித்து தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் பல முக்கிய பிரபலங்களும் காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்பொழுது சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த வழியில் வலம் வந்தவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவருமே திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
அதைப்போல் சூர்யா ஒரு சில திரைப்படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்ததால் இருவருக்கும் காதல் மலர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக பிள்ளைகளை பார்த்துகொண்டு வாழ்ந்து வருகிறார்கள் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு பின்பு ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதில் முழுக்க லீவு விட்டு விட்டார்.
என்றுதான் கூறவேண்டும் இருந்தாலும் பின்னர் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துவிட்டார் மேலும் ஜோதிகா நடிப்பில் தற்போது வரிசையாக பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் எங்கு சென்றாலும் உடனே புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து விடுவார்கள் அந்தவகையில் ஜோதிகா தனது உண்மையான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் தங்களின் 15வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடும்.
விதமாக சூர்யாவுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த இனிமையான தகவலை ரசிகர்களுக்கும் கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு நீங்கள் என்றும் பிரியாமல் பல திரைப்படங்களில் நடித்து வர வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.