Surya and jothika workout video: தமிழ் சினிமாவில் பிரபல தம்பதியினர்களான சூர்யா மற்றும் ஜோதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 1999ஆம் ஆண்டு வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஜோதிகா. இதற்கு முன்பு ஹிந்தியில் நடித்திருந்தார்.
ஆனால் வாலி திரைப்படம் தான் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக் கொடுத்தது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் முதல் முதலில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்தனர்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த புஷ்பா 2 டீசர்?
இதன் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர பிறகு 2006ம் ஆண்டு குடும்பத்தினர்கள் சம்பந்தத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்த ஜோதிகா சமீப காலங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருற்.
தே போல் நடிகர் சூர்யாவும் கங்குவா திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார் இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் பிட்டாக இருப்பதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அதன்படி 45 வயதாகும் ஜோதிகா பிட்டாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்பதை உணர்த்தும் வகையில் தன் கணவர் சூர்யாவுடன் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட அது வைரலாகி வருகிறது.
https://twitter.com/CinemaWithAB/status/1775163993239572830?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1775163993239572830%7Ctwgr%5E75b78aa048557e429c6f22e8cd2479c4c852dc96%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FCinemaWithAB%2Fstatus%2F1775163993239572830%3Fref_src%3Dtwsrc5Etfw