surya : திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் நடிக்கும் போது காதல் வயப்படுவது உண்டு. ஒரு சிலர் அதை முதலிலேயே கிள்ளி எரிந்து விடுவார்கள் ஒரு சிலர் மட்டும் காதலித்து திருமணம் வரை செய்து கொண்டு அதன் பிறகு பிள்ளையை பெற்றுக் கொண்டு இன்றும்..
அதே காதலுடன் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட ஜோடிகள் தான் அஜித் – ஷாலினி மற்றும் சூர்யா – ஜோதிகா.. அஜித் – ஷாலினி லவ் விஷயம் பற்றி நாம் நிறைய பேருக்கு தெரியும் ஆனால் சூர்யா – ஜோதிகா லவ் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
இவருடைய காதல் கதை ரொம்ப பெருசு.. சூர்யா – ஜோதிகா பெற்றோரின் சம்மதத்திற்காக நான்கு வருடங்களுக்கு மேலாக திருமணத்திற்காக காத்திருந்தனர். அந்த காலத்தில் இப்போ இருக்கிற டெக்னாலஜிகள் இல்லாததால் இவருடைய காதலுக்கு சிலர் உதவி செய்துள்ளனர் அதில் ஒருவர் அஜித்தின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சத்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரமேஷ் கண்ணா இவர் அஜித், விஜய், சூர்யா, கமல், ரஜினி என பல டாப் நடிகன் படங்களில் நடித்து அசத்தியவர். அப்படி ரமேஷ் கண்ணா தெனாலி படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் கமல், ஜோதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். அதே சமயம் பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுடன் நடித்திருப்பார்.
இதனால் ஜோதிகா எங்கு செல்கிறார் என்று சூர்யாவிடம் சொல்வாராம் சூர்யா எங்க செல்கிறார் என்று ஜோதியாவிடம் சொல்லுவாராம். மேலும் பேசிய அவர் பிரண்ட்ஸ் படத்தில் தேவயானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஜோதிகா எனவும் ரமேஷ் கண்ணா கூறி இருந்தார்.