இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவை தூக்கி விட்ட இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். விக்ரமின் சேது திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு பாலா நந்தா திரைப்படத்தை இயக்கி இருந்தார். சூர்யாவும் வேறு ஒரு கெட்டப்பில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.
இந்த நிலையில் நந்தா திரைபடத்திற்கு பிறகு பாலா சூர்யா, விக்ரம் ஆகியோரை வைத்து இயக்கிய திரைப்படம்தான் பிதாமகன். நந்தாவுக்கு நேரெதிராக சூர்யாவின் கதாபாத்திரம் இருந்தது. அதாவது பிதாமகன் திரைப்படத்தில் காமெடி ததும்ப ததும்ப சூர்யாவை காட்டியிருந்தார். குறிப்பாக சூர்யா ரயிலில் புடவை விற்கும் காட்சிகளாகட்டும் லங்கா கட்டை உருட்டும் காட்சி இவையெல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
மேலும் சூர்யா அவன் இவன் திரை படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் சூர்யா மற்றும் பாலா நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். கடைசியாக பாலா ஜோதிகாவை ஜிவி பிரகாஷ் ஆகியோர்களை வைத்து நாச்சியார் திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சூர்யா பாலா இணையும் புதிய திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இந்த நிலையில் சூர்யா பாலா இணையும் திரைப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இவர் தமிழில் நடிக்க இருப்பதால் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படமாக அமைய இருக்கிறது. பாலா இந்த திரைப்படத்தை இயக்குவதாள் கீர்த்தி செடிக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவருக்கு 18 வயதாகும் இவர் சூர்யாவுடன் டூயட் ஆடப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.